திருத்தணி

திருவள்ளூரிலிருந்து 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. அரக்கோணத்திற்கு வடக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருத்தணி இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து நேரடிப் பேருந்து வசதி உள்ளது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது. திருப்புகழில் குன்றுதோறாடல் என்பது இத்தலத்தையும் குறிக்கும். இத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்து அருளினார். இந்த மலை 400 அடி உயரம் உள்ளது. மொத்தம் 365 படிக்கட்டுகள் உள்ளது. இவை ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கின்றது.

மூலவர் தமது இடக்கரத்தை தொடைமீது வைத்து வலக்கரத்தில் வேலினை தாங்கி காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் ஆடிக்கிருத்திகை உற்சவமும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ஆம் தேதி படி உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இத்திருக்கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com